Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
Dec
அஜீத் படம் பொங்கலுக்கு முன்பே ரிலீஸ் ஆவது ஏன்?


சென்னை: பொங்கலுக்கு முன்பே அஜீத்தின் வீரம் ரிலீஸ் ஆவது ஏன் என்பதற்கு காரணம் தெரியவந்துள்ளது.பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி வருகிறது. கோலிவுட்டில் இம்முறை பொங்கலுக்கு அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா படங்கள் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் பொங¢கலுக்கு முன்பாகவே ஜனவரி 10ம் தேதி வீரம் ரிலீசாகிறது. வழக்கமாக தியேட்டர்களில் ரஜினி படத்துக்கு அடுத்தபடியான ஓபனிங், அஜீத் படத்துக்குதான் இருக்கும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

ரஜினி படத்துக்கு இணையான ஓபனிங் அஜீத் படத்துக்கு கிடைக்கிறது. மங்காத்தா, ஆரம்பம் படங்கள் இதற்கு உதாரணம். எனவே எந்த நாளில் ரிலீஸ் செய்தாலும் வீரம் படத்துக்கு 3 நாளுக்கு பெரிய ஓபனிங் கிடைத்துவிடும். அதே சமயம் எந்த ஹீரோவின் படமாக இருந்தாலும் முதல் 3 நாட்களுக்கு ரசிகர்கள் படம் பார்ப்பதால் தியேட்டர்கள் நிரம்பி வழியும். 4வது நாள் முதல் பெரும்பாலும் பேமிலி ஆடியன்ஸ் படம் பார்க¢க வருவார்கள். உடனே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல¢ பேமிலி ஆடியன்சுக்கு குறைவு. இதனால் முதல் 3 நாளில் 100 சதவீத டிக்கெட் கலெக்ஷன் காணும் பெரிய படங்கள், 4வது நாளில் 80, 70 சதவீதமாக குறையும்.

இந்த சூழலை மாற்றவே அஜீத்தின் வீரம் படத்தை பொங்கலுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்கிறார்கள். அதாவது, முதல் 3 நாட்களை போல், அடுத்து வரும் நாட்களிலும் அதே கலெக்ஷனை தக்க வைக்க வேண்டுமென்றால் அந்த நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் பேமிலி ஆடியன்சும் கூட்டம் கூட்டமாக படம் பார்க்க வருவார்கள். அந்த விதத்தில் பொங்கலுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. பொங்கல் விடுமுறை முடிந்ததுமே சனி, ஞாயிறு வந்துவிடுகிறது. ஆக, 3 நாள் பெரிய ஓபனிங்குக்கு பிறகு பொங்கல் மற்றும் வார விடுமுறை நாட்கள் அமைவது வீரம் படத்துக்கு பலமாக இருக்கும் என பட யூனிட் நம்புகிறது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran