சக நடிகையின் படம் ஊத்திக்கொண்டால் பார்ட்டி வைக்கும் ஹீரோயின்கள்
சென்னை:படம் வெற்றி அடைந்தால் பார்ட்டி வைப்பதுபோல், சக ஹீரோயின் நடித்த படம¢ ஊத்திக்கொண்டால் பார்ட்டி வைக்கும் கலாசாரம் சினிமாவில் பரவி வருகிறது.படம் வெற்றி அடைந்தால் வசூல் சாதனை என்று அறிவித்து சம்பந்தப்பட்ட பட குழுவினர் ‘சக்சஸ் பார்ட்டி வைக்கின்றனர். பாலிவுட்டிலிருந்து இந்த கலாசாரம் தென்னிந்திய சினிமா பக்கம் பரவியது. சமீபத்தில் வெளியான படங்களில் விஷால் நடித்த ‘பாண்டியநாடு படத்துக்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடப்பட்டது. அதேபோல் சில வாரங்களுக்கு முன் டோலிவுட்டில் சமந்தா நடித்த ஒரு படமும், ஸ்ருதி நடித்த ஒரு படமும் போட்டி படங்களாக ரிலீஸ் ஆனது. இதில் சமந்தா படம் சூப்பர் ஹிட் ஆனது. ஸ்ருதி படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இதையடுத்து சமந்தா பட குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடுகிறோம் என்ற பெயரில் ஸ்ருதி படத்தின் தோல்வியை கொண்டாடினார்களாம். இதில் பங்கேற்ற சமந்தா கேக் வெட்டி பார்ட்டியை களைகட்டவைத்தாராம்.
இதேபோல் கோலிவுட்டில் ‘சிறுத்தை ஹீரோ நடித்த படம் தீபாவளிக்கு வெளியானது இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதையடுத்து ஹீரோவை பிடிக்காத இண்டஸ்ட்ரிகாரர்கள் சிலர் பார்ட்டி கொண்டாடினார்களாம். இது பற்றி தகவல் அறிந்த ஹீரோ வருத்தம் அடைந்தாராம். அடுத்த படத்தில் வெற்றியை நிரூபிப்போம் கவலைப்படாதீர்கள் என்று ஹீரோவுக்கு உடனிருப்பவர்கள் ஆறுதல் கூறி தேற்றினார்களாம்.