Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
19
Nov
நான் 6 அடி உயரம் கிடையாது அனுஷ்கா அலறல்


சென்னை:‘நான் 6 அடி உயரம் கிடையாது 5.6 அடிதான் இருக்கிறேன் என்கிறார் அனுஷ்கா.அனுஷ்காவின் கவர்ச்சியான தோற்றம் எப்படி பிளஸ்ஸாக பேசப்படுகிறதோ, அதற்கு எதிர்மாறாக அவரது உயரம் அமைந்திருப்பதாக இண்டஸ்ட்ரியில் சலசலப்பு உண்டு. உயரம் குறைந்த நடிகர்களுடன் அவரை ஜோடி சேர்க்க முடியாமல் சில இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர். சமீபத்தில், ரொம்ப உயரமா இருக்கீங்க. உங்களுக்கு வரும் மாப்பிள்ளையும் உயரமாத்தான் இருக¢கணுமா? என அனுஷ்காவிடம் நிருபர்கள் கேட்டனர். உயரத்தையெல்லாம் பார்த்துட்டு இருந்தா, கல்யாணமே நடக்காது என ஆதங்கப்பட்டார் அனுஷ்கா.

இந்நிலையில் 6 அடி உயரம் உங்களுக்கு பிளஸ்ஸா மைனசா என்று அனுஷ்காவிடம் கேட்டபோது அலறினார். ஹலோ என் உயரம் 6 அடி கிடையாது. 5.6 அடிதான் எனது உயரம். 6 அடிக்கு பல இன்ச் குறைவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை உயரமான ஹீரோவா, குள்ளமான ஹீரோவா என்று பார்த்து நடிப்பதில்லை. ஸ்கிரிப்ட்டும் எனது கேரக்டரும் நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பாஹுபாலி படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்கள் முடிய சுமார் ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிவிடும். அதன்பிறகுதான் புதிய படம் ஏற்பேன் என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement