பிரியதர்ஷனுக்கு கால்ஷீட் தருவாரா சூர்யா?
சென்னை:‘காஞ்சிவரம்‘, ‘லேசா லேசா‘, ‘சினேகிதியே‘ போன்ற தமிழ் படங்கள் இயக்கியதுடன் பல்வேறு மலையாளம், இந்தி படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவர் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் இயக்குகிறார். அதற்கு ‘குஞ்சலி&மரக்கர்‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. குஞ்சில் கிருஷ் ணன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க குஞ்சலிமரக்கர் என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தெரிகிறது.
சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் மட்டுமே அஜீத், விஜய், விக்ரம் போன்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தார் சூர்யா. பின்னர் சோலோ ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். இந்நிலையில் மம்மூட்டி&மோகன்லால் என பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் சூர்யா நடிப்பாரா என்று திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது. சூர்யா நடிப்பது பற்றி பிரியதர்ஷனிடம் கேட்டபோது,‘சூர்யா இப்படத்தில் நடிப்பதுபற்றி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இதுபற்றி தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது‘ என்றார்.