Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
26
Oct
மணலியில் நள்ளிரவில் பயங்கரம் தலையில் அம்மி கல்லை போட்டு மாமியார் கொடூரகொலை மருமகள் போலீசில் சரண்


திருவொற்றியூர்:அம்மி கல்லை தலையில் போட்டு மாமியாரை கொலை செய்த மருமகள், போல¦சில் சரண் அடைந்தார். மணலியில் நள்ளிரவில் நடந்த  இந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மணலி ஜலகண்ட மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). துபாயில்  வேலை செய்து வருகிறார். மனைவி குளோரி (27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ராமகிருஷ்ணன் என்ற மகனும், 6 மாதத்தில் கீர்த்தி என்ற  குழந்தையும் உள்ளது.

சுந்தரத்தின் அப்பா இறந்து விட்டார். அவரது அம்மா செல்வி (50), குளோரியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் வேலைகள் செய்வது தொடர்பாக செல்விக்கும், குளோரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்களுடன் குளோரி  அடிக்கடி செல்போனில் பேசுவாராம். இதையும் செல்வி கண்டித்துள்ளார்.

 இதன் காரணமாகவும் அவர்களுக்கிடையே சண்டை ஏற்படும். இது குறித்து  இருவருமே தனித்தனியாக சுந்தரத்திடம் போன் செய்து முறையிட்டு வந்துள்ளனர். நேற்றிரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சாப்பிட்டு முடிந்ததும்  அனைவரும் படுக்கைக்கு சென்று விட்டனர். மாமியாரால் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறதே என குளோரிக்கு ஆத்திரம் அதிகமானது.

தூக்கம்  வரவில்லை. நள்ளிரவு ஒரு மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த குளோரி, சமையல் அறைக்கு சென்றார். அங்கிருந்த அம்மி கல்லை தூக்கி
வந்து செல்வியின் தலையில் போட்டார். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த செல்வி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் மணலி போலீஸ் நிலையத்துக்கு குளோரி, தனது இரு குழந்தைகளுடன் வந்தார். அங்கிருந்த போலீசாரிடம், ‘எனது  மாமியாரின் தொல்லை தாங்க முடியாததால் அம்மி கல்லை அவரது தலையில் போட்டு கொலை செய்து விட்டேன் என குளோரி கூறினார்.

இதை  கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து குளோரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று  செல்வியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மாமியாரின் தலையில் அம¢மி கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement