கள்ளக்காதல் பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விடுகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் க.கா. செய்கிறார்கள். நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை ஒருவர், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந¢த கணவனை, காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டுக் கொன்றிருக்கிறார். 6 மாதங்களுக்கு பிறகு இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது. இதற்கு உயிரின் மதிப்பு தெரியாத ஒரு டாக்டரும் உதவி இருக்கிறார்.
மன்னார்குடி அருகே உள்ள மரக்கடை கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். தலைமை ஆசிரியர். மனைவி சுமதி உதவி ஆசிரியை. கடந்த மே 14ம் தேதி தனசேகரன் வீட்டில் இறந்து கிடந்தார். இந்நிலையில், டிவி நிகழ்ச்சியில் பேட்டி அளித்த சுமதி, தனது கணவனை கள்ளக்காதலன் ராஜனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டதாக கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், திருவாரூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ஆசிரியை சுமதி, ஆஜரானார். அப்போது, சக ஆசிரியர் ராஜனுடன் கள்ளக்காதல் இருப்பது தெரிந்து கணவர் தனசேகரன் சண்டை போட்டார்.
அதனால் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டேன். தனியாக வசித்த கணவரை ராஜன் விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டார். அந்த டாக்டர் யார் என்று தெரியாது என்று சுமதி கூறினார். இதையடுத்து, ராஜனை போலீசார் கைது செய்தனர். தனசேகரன் வீட்டில் இறந்து கிடந்தார். அங்கு ஒரு ஊசி கிடந்தது. போலீசில் தெரிவித்தேன். போலீசார் விசாரணை நடத்தி போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும் பிணத்தை எரித்து விடுங்கள் என அவசரப்படுத்தினார்கள். போலீசார் காட்டிய அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே சொந்த ஊரில் சடலம் சீக்கிரம் கெட்டுவிட கூடாதபடிக்கு உப்பு கொட்டி அடக்கம் செய்தோம் என கொல்லப்பட்ட தனசேகரனின் தம்பி அருள் தெரிவித்தார். கள்ளக்காதலன் ராஜனிடம் நடத்திய விசாரணையில் விஷ ஊசி போட்டவர் மன்னார்குடி முத்துப்பேட்டை சாலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் என தெரிய வந்துள்ளது.
சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் தம்பதியர் பிரிந்து விடலாம். அதற்கு சட்டப்படி வழி இருக்கிறது. அதைவிட்டு, கொலை செய்ய நினைப்பது காட்டுமிராண்டித்தனம். ஒருவர் சாவில் இன்னொருவர் சந்தோஷத்தை அனுபவித்து விட முடியாது. மனசாட்சி உறுத்தாவிட்டாலும் ஒருநாள் உண்மை தெரியவரும்போது, ஊரே காரித் துப்பிவிடும்.