மகளை தயார்படுத்தும் ஸ்ரீதேவி
சென்னை:மகளை சின¤மாவில் அற¤முகப்படுத்தும் எண்ணம் இல்லை என கூறிவ¤ட்டார் ஸ்ரீதேவி.அத்துடன் நிற்கவில்லை. படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க யோசித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். சினிமாக்காரர்களின் காதுகளுக்கு ஸ்ரீதேவியின் இந்த ஸ்டேட்மென்ட் கண்டிப்பாக சென்றடையாது. அது ஸ்ரீதேவிக்கே தெரியும். ரசிகர்கள் இதுபோன்ற நடிகைகளின் அறிவிப்புகளை 6 மாதத்துக்கு மேல் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவும் ஸ்ரீதேவிக்கு நன்றாக தெரியும். அந்த நம்பிக்கையில் தனது மகளை பற்றி அவர் சொன்னதாகவே இதை கருதலாம்.
இந்தி சினிமாவில் தான் விட்டுச் சென்ற இடத்தை தனது மகள் ஜான்வி பிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இதை ஸ்ரீதேவிக்கு நெருங்கியவர்கள் சொல்கிறார்கள். அதற்காகவே ஜான்வியை அவர் தயார்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்கள். அதனாலேயே தான் ஆஜராகும் சினிமா விழாக்களில் தவறாமல் ஜான்வியையும் அவர் அழைத்து வந்து விடுகிறார். அதுவும் குட்டை பாவாடைகளில்.