எல்லோ டைமண்ட்சிப்ஸ் கம்பெனி தமிழகத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை இயக்குனர் கல்யாணசுந்தரம் தகவல்
சென்னை:சிப்ஸ் வகைகளில் சிறந்து விளங்கும் எல்லோ டைமண்ட் விற்பனை இயக்குனர் எஸ்.கல்யாணசுந்தர மூர்த்தி கூறியதாவது:
சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியை 2005ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொடங்கினேன். முதல்கட்டமாக 30 ஆயிரம் மட்டுமே ஆண்டு வருமானமாக இருந்தது. விடா முயற்சியுடன் செயல்பட்டு தின்பண்ட வகைகளை ரிங்ஸ், வீல்ஸ், புதினா, உருளைகிழங்கு, தக்காளி ஆகிய பத்துக்கு மேற்பட்ட சிப்ஸ் வகைகளை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்தேன். தற்போது திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் எல்லோ டைமண்ட் சிப்ஸ் கிளை செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் சிப்ஸ் விற்பனையில் 2ம்இடத்தை தக்கவைத்துள்ள எல்லோ டைமன்ட் சிப்ஸ் கம்பெனி வளர்ச்சியடைய பெரிதும் காரணமாக இருக்கும் வாடிக்கையாளர்கள், முகவர்கள், தொழிலாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கல்யாணசுந்தரமூர்த்தி கூறினார்.