சுதந்திர தினத்துக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நக்சல் கைது
தர்மபுரி: தர்மபுரியில் சுதந்திர தினத்துக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நக்சலைட் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம் புலிகரை அருகே செங்கம்பட்டியை சேர்ந்த வெங்கடாமி மகன் ராமலிங்கம் (45). விடுதலை விவசாய முன்னணி இயக்க நிர்வாகியான இவர் நேற்று அதிகாலையில் தர்மபுரி டவுன் பகுதியில் சுதந்திர தினத்திற்கு எதிராக, ‘போலி சுதந்திரத்தை புறக்கணிப்போம்‘ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நக்சல் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐக்கள் சவுகத்அலி, துரைசேகரன், சாய்ராம், அருள், சின்ராஜ், மணிவண்ணன், பழனி உள்ளிட்டவர்கள் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்து தர்மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி எஸ்பி ஆஸ்ராகர்க் உத்தரவின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.