சிவகாசி:சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ¢ட் மாதம் புதிய ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் துவங்கும். இங்கு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கன்று 2014ம் ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் வெளியிட்டு சிவகாசி நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கின. இதற்குத் தேவையான பஞ¢சாங்க குறிப்பு, நட்சத்திர பலன், திதி, விசேஷ தினங்கள், மற்றும் சுபமுகூர்த்த தினங்களை ஜோதிடர்கள் கணித்து, ஜூன் மாதமே வழங்கிவிட்டனர். காலண்டர் தயாரிப்பிற்கான ஆர்டர்கள் அக¢டோபர் மாதம் வரை பெறப்படும். டிசம்பர் 15ம் தேதிக¢குள் காலண்டர் தயாரிப்புப் பணிகள் முடிந்துவிடும்.
20க¢கும் மேற¢பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இங்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.100 கோடி வரை காலண்டர் வர்த்தகம் நடைபெறுகிறது. தினசரி காலண்டர்கள் பல்வேறு படங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. விளம்பர நிறுவனங்களின் ஆர்டர் காலண்டர்கள் பலவித படங்கள், முகவரிகளுடன¢ தினசரி சிலிப்கள் ஒட்டப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. தினசரி சிலிப் கேக்குகள் அளவை பொறுத்து, ரூ.6 முதல் ரூ.96 வரை பலவிதங்களில் உள்ளது. இந்த ஆண்டு புதிதாக டை கட்டிங் தினசரி சிலிப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.17. இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது தவிர மாத காலண்டர்களும் தயாரிக¢கப்படுகின்றன. 11&18 சைஸ் 4 சீட் மாத காலண்டர் ரூ.13க்கு விற்பனை செய்யப்படுகிறது. 20&30 சைஸ் 12 சீட் மாத காலண்டர் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு 5 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.