சென்னை:‘ரோஜா‘, ‘ஜென்டில்மேன்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மதுபாலா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக நின்றுவிட்ட நிலையில் தற்போது நாடகத்தில் நடிக்க வருகிறார். வரும் 15ம் தேதி மும்பையில் நடக்க உள்ள ‘த வெர்டிக்ட்‘ என்ற மேடை நாடகத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியது: மேடை நாடகத்தில் நடிக்க வருவது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. இது நடிப்பவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கும், நடிப்பை அனுபவித்து நடிப்பதற்குமான இடம். அனுபம்கெர், பரேஷ் ராவல் போன்ற பாலிவுட் நடிகர்கள் நாடகத்தில் தொடர்ந்து நடிப்பதற்கு காரணம் அதில் அவர்கள் காணும் பரவசம்தான். இவர்களைப் போன்றவர்கள் என்றைக்குமே நாடகத்தை விட்டு விலக மாட்டார்கள். காரணம் அதற்கு அவர்கள் அடிமையாகிப்போனதுதான். சினிமாவையும், நாடகத்தையும் ஒப்பிட முடியாது. இரண்டுக்கும் பொருளாதார வித்தியாசம் அதிகம். ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக நடிக்கப்போகிறேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சி.