Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Aug
4வது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி ஹாட்ரிக் கோப்பை வென்றது


இங்கிலாந்து&ஆஸ்திரேலியா அணிகள் இடை யேயான ஆசஷ் டெஸ்ட் தொடரின் 4வது ஆட்டம் செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 238 ரன்னும் ஆஸ்திரேலியா 270 ரன்னும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 330 ரன் குவித்து ஆல்&அவுட் ஆனது.

இயான் பெல் 113, பெர்சனன் 45 ரன் எடுத்தனர். ஆஸி. தரப்பில் ஹாரிஸ் 7 விக்கெட் சாய்த்தார். நாதன் லியான் 3 விக்கெட் கைப்பற்றினார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்றைய 4வது நாள் ஆட்டத்தை ஆஸி. அணி தொடர்ந்து ஆடியது.

முதல் விக்கெட்டுக்கு வார்னர்& ரோஜர்ஸ்  ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸி. அணி எளிதில் வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வேகம் பிராடு ஆஸி. அணியை புரட்டிப்போட்டார். அவருக்கு உறுதுணையாக பெர்சனன், ஸ்வானும் அசத்தினர்.
ரோஜர்ஸ் 49, வார்னர் 71, ஹவாஜா 21, கிளார்க் 21, ஸ்மித் 2, வாட்சன் 2, ஹடின் 4, சிடில் 23, ஹாரிஸ் 11, நாதன் லியான் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் ஆஸி. 68.3 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல்& அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் பிராடு 6, பெர்சனன், ஸ்வான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது பிராடுவிற்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3&0 என வென்றது. ஏற்கனவே இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்திருந்தது. இங்கிலாந்து தொடர்ச்சியாக 3வது முறையாக ஆசஷ் தொடரை வென்று சாதித்துள்ளது. 5வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 21ந்தேதி ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran