Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Aug
இன்று லெப்ட் ஹேண்ட் பழக்கம் உள்ளவர் தினம்


சென்னை:மனிதர்கள் பெரும் பாலும் வலது கையை பயன்படுத்திதான் எல்லா வேலை களையும் செய்கின்றனர். இடது கையால் பணிகளை செய்வதென்றால் அதற்கு நீண்ட காலம் பழக வேண்டி இருக்கும். ஆனால், பிறவியிலேயே சிலர் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். எழுதுதல், ஓவியம் வரைதல், பந்து வீசுதல், சாப்பிடுவது உள்பட எல்லா பணிகளையும் இடது கையால் மிக சிறப்பாகவும் வேகமாகவும் செய்வார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், தற்போதைய அதிபர் ஒபாமா ஆகியோரும் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான்.  

கடந்த 1990ம் ஆண்டு, இடது கை பழக்கம் உள்ளவர்கள் ஒன்று கூடி, இடது கை பழக்கம் உடையவர்கள் கிளப் எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தினர். இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ம் தேதியை ‘உலக இடதுகை பழக்கம் உடையோர் தினமாக’ 1992ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கின்றனர். அது முதல் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இந்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 2001ம் ஆண்டில் 20 இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில், வலது கை பழக்கம் உடையவர்கள் இடது கையை பயன்படுத்தி எழுதுதல், ஓவியம் வரைதல், விளையாடுதல் போன்றவற்றை மேற்கொண்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran