விளைச்சல் பாதிப்பு மிளகாய் விலை விர்.. ஒரு கிலோ 74
சேலம்: தமிழகத்தில் சாத்தூர், விருதுநகர், விளாத்திக்குளம், பரமகுடி, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திரா, கர்நாடகாவில் பல ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடியில் ஏக்கர் கணக்கில் மிளகாய் சாகுபடி செய்கின்றனர்.
இங்கு விளையும் மிளகாயை விவசாயிகள் அறுவடை செய்து, சேலம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேலம் உள்பட பல மாவட்டங்களில் மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு தினசரி 10 டன் பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் பச்சைமிளகாய் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வர வேண்டிய பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ^35ல் இருந்து ^74 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.