ஆசஷ் டெஸ்ட் தொடர் பெல் சதத்தால் இங்கிலாந்து முன்னிலை
ஆஸ்திரேலியா & இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆசஷ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி செஸ்டர் லீஸ்ட்ரிட்டில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 238 ரன்னுக்கு சுருண்டது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பெரிய அளவில் ரன் களை குவிக்க முடியவில்லை.
அந்த அணி 270 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ரோஜர்ஸ் 110 ரன்னும், வாட்சன் 68 ரன்னும் எடுத்தனர். அதன்பின் 2வது இன்னிங்சை இங்கிலாந்து தொடர்ந்தது. கேப்டன் குக் 22 ரன்னுக்கும், ரூட் 8 ரன்னுக்கும், ட்ரோட் 23 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன் என்ற நிலையில் தடுமாறிய இங்கிலாந்து அணியை இயான்பெல்லும், பீட்டர்சனும் மீட்டனர்.
சிறப்பாக ஆடிய பீட்டர் சன் 44 ரன்னுக்கு ஆட்டமிழந் தார். பெல்லுடன் பேர்ஸ்டவ் ஜோடி சேர்ந்து ரன்களை உயர்த்தினர். பேர்ஸ்டவ் 28 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய பெல் சதம் அடித்தார். 3வது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன் எடுத்திருந்தது.
பெல் 105 ரன்னுடனும், பெர்சனன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி இதுவரை 202 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் முடிவு இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.