ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
திருவள்ளூர்:ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.அம்பத்தூர் அருகே ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (48). இவர் கடந்த மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச்சென்றார்.
திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது கிறிஸ்டோபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கிறிஸ்டோபர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக ஐந்து வழக்குகள் உள்ளது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். கலெக்டரின் உத்தரவின்படி கிறிஸ்டோபர் மீண்டும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.