பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் பாமக கோரிக்கை
திருவள்ளூர்:திருவள்ளூர் நகர, பூண்டி ஒன்றிய பாமக பொதுக்குழு கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். நகர தலைவர் ந.ரமேஷ் வரவேற்றார். நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், தலைவர் மணி முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் வ.பாலயோகி சிறப்புரையாற்றினார்.
மாதந் தோறும் 5ம் தேதி கிளை கூட்டம் நடத்தவேண்டும். திருவள்ளூர் நகராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். விடையூர்&கலியனூர் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன..கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் வெங்கடேசன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜெயந்தி இளவரசு நன்றி கூறினார்.