தவான் அதிரடியில் இந்தியா ஏ வெற்றி
தென் ஆப்ரிக்காவில் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா ஏ முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று தென் ஆப்ரிக்கா ஏ-இந்தியா ஏ அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 38 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.
ஷிகார் தவான் 67 பந்தில் 3 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 85 ரன் விளாசினார். ரோகித் ஷர்மா 65, ரெய்னா 60, அம்பாதி ராயுடு 57, தினேஷ் கார்த்திக் 18, புஜாரா 9, பின்னி 4 ரன் சேர்த்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் வில்ஜோன், ஆன்டாங்க் தலா 2, ஹென்ட்ரிக்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினர்.
மழை குறுக்கீட்டால் 34.4 ஓவரில் 277 ரன்கள் எடுக்க வேண்டும் என தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா ஏ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எல்கார் 84, வான் ஜார்ஸ்வெல்டு 69 ரன் சேர்த்தனர். இந்தியா ஏ தரப்பில் ரசூல், நதீம் தலா 2, உனத்கட் 1 விக்கெட் கைப்பற்றினர்.