Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
10
Aug
பாக். தீவிரவாதிகள் அட்டூழியம் பெரிய்யய... மீசை வளர்த்ததால் வியாபாரியை கடத்தி மிரட்டல்


பெஷாவர்:பாகிஸ்தானில் நீண்ட மீசை வளர்த்த வியாபாரியை தீவிரவாதிகள் கடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற போவதாக தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் மாலிக் அமீர் முகமது கான் அபிரிடி (48), வியாபாரி. எந்த பிரச்னைக்கும் போகாமல் தானுண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்தவரை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். அதற்கு காரணம் மாலிக்கின் பெரிய்யய... மீசைதான். பழமைவாதத்தை வலியுறுத்தி வரும் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் பெரிய மீசை வளர்க்க கூடாது என்று கூறி மாலிக்கை கடத்தி குகையில் அடைத்தனர்.

மீசையை பெரிதாக வைத்து கொள்ள மாலிக்குக்கு ஆசை. சுமார் 30 அங்குலம் நீளத்துக்கு மீசையை வளர்த்து குழந்தையை போல தடவி, சீராட்டி, பராமரித்து வந்தார். தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் பற்றி மாலிக் கூறுகையில், கடந்த 2009ம் ஆண்டு என்னை தீவிரவாதிகள் கடத்தி சென்று ஒரு குகையில் அடைத்தனர். எனது நீளமான மீசையை வெட்டிவிட வேண்டும் அல்லது முற்றிலுமாக மழித்து விட வேண்டும் என்று மிரட்டினர். ஆசை ஆசையாக வளர்த்த மீசையை வெட்டிய பிறகே என்னை விடுவித்தனர் என்று பரிதாபமாக தெரிவிக்கிறார்.

ஆனாலும் மீசை ஆசை விடவில்லை. தீவிரவாதிகள் பிடியில் இருந்து வந்த பிறகும் நீளமான மீசை வளர்த்துள்ளார். தீவிரவாதிகள் கண்ணில் சிக்காமல் இருக்க அடிக்கடி பைசலாபாத், பெஷாவர் என மாறி மாறி வசித்து வருகிறார். இப்போது ரம்ஜான் மாதம் என்பதால் குடும்பத்தினரோடு இருப்பதற்காக பெஷாவர் திரும்பி உள்ளார். தீவிரவாதிகள் என்னை நிச்சயம் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறேன். இதனால் வெளிநாட்டில் தஞ்சம் அடைய விரும்புகிறேன் என்கிறார் பதற்றத்துடன்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran