பிசிசிஐக்கு ரூ.50 கோடி இழப்பு
கர்நாடக மாநிலம் குர்கி பகுதியில் அம்மாநில தொழிற்சாலை மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான 49 ஏக்கர் நிலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2010ம் ஆண்டு ரூ.50 கோடிக்கு வாங்கியது. ஆனால் நில விற்பனை ஒப்பந்தத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தொடர்பு இல்லாத ஷான்பாக் என்பவர் கையெழுத்திட்டார்.
இந்த நில விற்பனையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் நில ஒப்பந்தம் சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.