Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
08
Aug
கிரிக்கெட் பேட்டில் ‘சிலிகான் டேப்’ சர்ச்சை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் விசாரணையா? ஐசிசி மறுப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆசஷ் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் எழுந் தால் அதனை எதிர்த்து அப்பீல் செய்யும் டிஆர்எஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் இந்த தொழில்நுட்பத்தில் சில தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

பந்து பேட்டில் உரசியதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க இன்ப்ரா ரெட் கேமிரா உதவியுடன் ஹாட் ஸ்பாட் முறை பயன்படுத்தப்படுகிறது. பந்து பேட்டில் பட்டால் அது துல்லி யமாக காட்டிவிடும். இந்த ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பத்தை குழப்புவதற்காக ஆசஷ் தொடரில் இரு அணிகளிலும் சில வீரர்கள் நூதன மோசடி யில் ஈடுபட்டதாக தற்போது பரபரப்பு தகவலை ஆஸ்திரேலிய டி.வி. சேனல் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அதாவது பேட்டில் பந்து உரசி செல்வதை இன்ப்ரா ரெட் கேமிராவால் கண்டுபிடிக்க முடியாத வகையில் சிலிகான் என்ற ஒரு வகை உலோக டேப்பை பேட்டில் ஒட்டி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், அந்த டி.வி. சேனல் மறைமுகமாக குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பீட்டர்சன், நான் அவுட் என்றால் நானே வெளியே சென்று விடுவேன். பந்து பேட்டில் உரசுவதை மறைக்க நான் சிலிகான் டேப் ஒட்டியதாக கூறுவது முட்டாள்தனமானது என்று ஆவேசப்பட்டுள்ளார்.

மேலும் இந்த மோசடி குறித்து ஐசிசி பொது மேலாளர் ஜெப் அலார்டைஸ் விசாரணை நடத்த உள்ளதாகவும் அந்த டி.வி. சேனல் கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை ஐசிசி மறுத்துள்ளது. ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸ் கூறியது: ஐசிசி பொது மேலாளர் ஜெப் அலார்டைஸ் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் டிஆர்எஸ் முறையை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தினார். மற்றபடி டி.வி. சேனல் கூறியபடி எந்த வீரரிடமும் விசார ணை நடத்தப்படவில்லை. அது தவறான தகவலாகும் என்று அவர் கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran