மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் ரபேல் நடால் வெற்றி
கனடாவில் மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்பெயினின் ரபேல் நடாலும், கனடா வின் ஜெசி லெவினும் மோதினர். போட்டி 71 நிமிடமே நடந்தது. நடால் 6&2, 6&0 என்ற நேர்செட்டில் ஜெசி லெவினை எளிதாக வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
இவர் 6 வாரங்களுக்கு முன்பு விம்பிள்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டிமுரேயும், ஸ்பெயின் வீரர் மார்ஷல் ரேனோலர்சும் மோதினர். இதில் ஆன்டிமுரே 6&4, 7&6 (7/2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
டொரன்டோவில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் சீனாவின் நா லீயும், ரஷ்யாவின் அனஸ்தசியாவும் மோதினர். இதில் நா லீ 6&1, 6&4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் பிரான்சின் மரியன் பர்ட்டோலியும், அமெரிக்காவின் லாரன் டேவிசும் மோதினர். இதில் 6&0, 6&3 என்ற செட் கணக்கில் பர்ட்டோலி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.