வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் பதில்
சென்னை: ‘வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி படங்களை தவிர ஹாலிவுட் படத்துக்கும் இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது ஏன் என்றதற்கு பதில் அளித்தார்.
இதுபற்றி அவர் கூறியது:
வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு காரணம் அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுடன் வெவ்வேறு கலாச்சாரங்களையும் இசையால் இணைக்க வேண்டும் என்பதுதான். ‘நீங்கள் எப்போது ரிலாக்ஸ் ஆவீர்கள்?“ என்கிறார்கள். ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கென என்னால் நேரம் ஒதுக்க இயலாது. நான் இன்னும் நிறைய பணிகளை முடிக்க வேண்டி இருக்கிறது.
எனது இசைப் பள்ளி மற்றும் நிறைய திட்டங்கள் என்னை பிஸியாக வைத்திருக்கிறது. இது கடவுள் காட்டிய வழி. நான் இசையை உருவாக்குவதற்காகவே இங்கு இருக்கிறேன். அதைத் தொடர்ந்து செய்வேன். சொல்லப்போனால் இப்போதுதான் எனது பணிகள் தொடங்கி இருக்கின்றன. இவ்வாறு ரகுமான் கூறினார்.