தங்கர்பச்சான் மீது வருத்தமா? பிரபுதேவா பதில்
சென்னை:‘தங்கர் பச்சான் மீது வருத்தமா? என்றதற்கு பதில் அளித்தார் பிரபுதேவா.தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள். 2 வருடமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தங்கர்பச்சான் தெரிவித்தார். நடனம், பாட்டுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஸ்கிரிப்ட் அமைத்ததில் தங்கர்பச்சான் மீது வருத்தமா என்று பிரபுதேவாவிடம் கேட்டபோது பதில் அளித்தார்.
‘தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறேன். அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் தமிழில் நடிக்கிறீர்களா என்று கேட்டால் Ôகளவாடிய பொழுதுகள் படத்தில் நடிப்பதாக சொல்வேன். இது எனது பாணியிலான படம் அல்ல. தங்கர்பச்சான் பாணியிலான படம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.
எனது பாணியில் நடனம், ஸ்டைல் இருக்குமா என்கிறார்கள். நிறைய படங்களில் எனது நடனம், ஸ்டைலை ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். இந்த படத்தில் காதலை மையமாக வைத்து உணர்ச்சிகரமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்கர்பச்சான் அழகி படத்தின் பாணியில் இந்த கதையை அமைத்திருக்கிறார்‘ என்றார் பிரபுதேவா.தங்கர்பச்சான் கூறும்போது, ‘இதுவரை பிரபுதேவாவின் நடனம் மட்டுமே கண்ணுக்கு தெரிந் தது. இப்படத்தில அவரது நடிப்பு திறமை வெளிப்படும் என்றார்.