ஆசஷ் 3வது டெஸ்ட் டிரா தொடரை வென்றது இங்கிலாந்து
இங்கிலாந்து&ஆஸ்திரேலியா அணிகள் இடையே புகழ்மிக்க ஆசஷ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முதல் 2 ஆட்டங்களிலும் வென்றது. இந்நிலையில் ஓல்டு டிராப்போர்டு நகரில் 3வது டெஸ்ட் போட்டி நடந்து வந்தது.
இதன் முதல் இன்னிங்சில் ஆஸி. 7 விக்கெட் இழப்பிற்கு 527 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி 368 ரன்னில் ஆல்&அவுட் ஆனது. 159 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸி. 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி பேட் செய்தது. அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை தொடரமுடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி ஆசஷ் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. கடைசி 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸி. அணி வெற்றி பெற்றாலும் கடந்த முறை கோப்பையை வென்றிருந்ததால் இங்கிலாந்து அணிக்கு தான் சாம்பியன் பட்டம் சென்றடையும். 4வது டெஸ்ட் போட்டி வருகிற 9ந்தேதி செஸ்டர் லீ&ஸ்டிரீட் நகரில் நடக்கிறது.