ஸ்பாட் பிக்சிங்கா.... அப்படின்னா என்ன? சண்டிலா அந்தர்பல்டி
ஐபிஎல் 6வது சீசன் போட்டிகளில் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா கைது செய்யப்பட்டார். அவர் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சண்டிலா தனது சகோதரரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பெயிலில் வந்துள்ளார். தனியார் டி.வி. ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
என் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் எனது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். நான் கிரிக்கெட் வீரர் தான். தீவிரவாதி ஒன்றும் இல்லை. நான் கைது செய்யப்பட்ட மறுநாளே எனது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் இருந்தே வாழ்க்கையில் விரும்பத்தகாத விஷசயங்கள் அதிகம் நடந்துவிட்டன.
எனக்கு நடந்தது போல வேறு யாரும் நடக்கக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். ஸ்பாட் பிக்சிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சூதாட்ட தரகர்கள் என்னை யாரும் அணுகவில்லை. கடின உழைப்பின் காரணமாகவே கிரிக்கெட் வீரரானேன். கடந்த 2 ஐபிஎல் சீசன்களை பார்த்தால் எனது திறமை என்னவென்று தெரியும். கடவுளின் அருளால் மீண்டும் அணிக்கு விரைவில் திரும்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.