Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
06
Aug
உலக சாம்பியன் பட்டம் வென்றவர் கண்களை கட்டி செஸ் விளையாடி மாற்று திறனாளி பெண் அசத்தல்


திருச்சி:மாற்று திறனாளிகள் உலக செஸ் சாம்பியனான ஜெனித்தா ஆண்டோ, கண்களை கட்டி செஸ் விளையாடி வெற்றி பெற்றார்.
மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் திருச்சியை சேர்ந்த ஜெனித்தா ஆன்டோ. இவர், கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடப் போவதாக அறிவித்திருந்தார். திருச்சியில் நேற்று போட்டி நடந்தது. அவருடன் விளையாட மண்ணச்சநல்லூர் அரசு பள்ளி ஆசிரியர் முகமது அலி தேர்வானார். இவர், கடந்த 4ம் தேதி நடந்த மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தவர். கலெக்டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்ததோடு, முழு போட்டியையும் பார்த்தார்.

முகமது அலியின் ஒவ்வொரு காய் நகர்த்தல் குறித்தும் நடுவர் தினகரன் கூற பதிலுக்கு எந்த காயை நகர்த்த வேண்டும் என்று ஜெனித்தா கூறினார். அதன்படி நடுவர் காயை நகர்த்தினார். 44வது நகர்த்தலில் ஜெனித்தா வென்றார். அவருக்கு மாவட்ட நலப்பணிகள் நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

ஜெனித்தா கூறுகையில், வீட்டில் குடும்பத்தினருடன் கண்ணைக் கட்டிக் கொண்டு செஸ் விளையாடி உள்ளேன். வெளியிடத்தில் விளையாடுவது இதுதான் முதல் முறை. கண்ணைக் கட்டிக் கொண்டு விளையாடுவதன் மூலம் கவனிப்பு திறன் அதிகரிக்கும். இதில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

திருச்சி பொன்மலைப்பட்டியை சோ¢ந்த ஜெனித்தா ஆண்டோ 3 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இரு கால்களும் செயல் இழந்தன. 2007&ல் போலந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகள் செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2010&ல் ரஷ்யாவில் நடந்த போட்டியில் மாஸ்டர் பட்டம், இந்தாண்டு ஜூனில் செக் குடியரசில் நடந்த உலக செஸ் போட்டியில் பெண்களுக்கான சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran