Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
05
Aug
உலக நீச்சல் போட்டி 6 தங்க பதக்கம் வென்று மிஸ்சி பிராங்க்ளின் சாதனை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஸ்பெயினின் பார்சி லோனா நகரில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் இளம்வீராங் கனை மிஸ்சி பிராங்க்ளின் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வெற்றி மேல் வெற்றி குவித்து தங்க பதக்கங்களை அள்ளினார். 100 மற்றும் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 4  ஜ்  100, 4  ஜ்  200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் தொடர் நீச்சல் போட்டிகளில் அவர் தங்கபதக்கம் வென்றார்.

நேற்று மெட்லி பிரிவில் 4  ஜ்  100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டி நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 53.23 நொடியில் கடந்து தங்கபதக்கத்தை வென்றனர். அமெரிக்க அணியின் வெற்றிக்கு பிராங்க்ளின் பங்கு முக்கியத்துவம் பெற்றது. இந்த தங்க பதக்கத்துடன் அவர் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்க பதக்கம் குவித்து புதிய  சாதனை படைத் தார். பெண்கள் வரிசை யில் இதுதான் உலக சாதனையாகும்.

2001ல் ஜப்பானில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டி யில் ஆஸ்திரேலியாவின் இயான் திராப் 6 தங்க பதக்கங் களை வென்றிருந்தார். இந்த சாதனையை மிஸ்சி சமன் செய்தார். அமெரிக்காவின் மைக் கேல் பெல்ப்ஸ் ஒரே சாம்பியன் ஷிப் போட்டி யில் 7 தங்கபதக்கம் பெற் றது உலக சாதனையாக உள் ளது. மிஸ்சியை மைக்கேல் பெல்ப்சுடன் ஒப்பிட்டு பேச தொடங்கி விட்டனர்.இதுகுறித்த கருத்து தெரிவித்த மிஸ்சி, நான் யாரை போன்றும் இருக்க விரும்பவில்லை. நான் மிஸ்சியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran