Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
05
Aug
கிளிப்பிங்ஸ்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இந்தியில் விஜய்

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ‘சலீம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து 50 சதவீதம் முடிந்திருக்கிறது. Ôமுசாபிர்‘, ‘கோல்‘, ‘ரைட்‘ போன்ற இந்தி படங்களில் நடித்திருக்கும் அக்ஷா பரதசனி, ஜோடியாக நடிக்கிறார். 3 மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி பற்றி ஷாருக்

ஷாருக்கானின் அம்மா பிறந்த ஊர் ஐதராபாத், தீபிகா படுகோன் சொந்த ஊர் பெங்களூர், சத்யராஜ் பிறந்த ஊர் கோவை. தென்னிந்தியர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம்தான் ‘சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படம். இப்பட நிகழ்ச்சிக்காக சென்னை வந்த ஷாருக் ரஜினியை பற்றி ஏகத்துக்கு புகழ்ந்தார். ‘உலகத்திற்கு ஒரே சூப்பர் ஸ்டார்தான். அவர்தான் ரஜினி. இது எல்லோருக்கும் தெரியும். ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு வியந்திருக்கிறேன் என அடுக்கிக்கொண்டே போக கரகோஷம் அரங்கை அதிர வைத்தது.

இயக்குனருக்கு கெட்டி மேளம்

முரளி நடித்த ‘இதயம், பிரபு நடித்த ‘உழவன், ‘காதல் தேசம், ‘காதலர் தினம், ‘காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கதிர். இவருக்கும்
தஞ்சையை சேர்ந்த சாந்தினி தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 2ம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது. பிறகு 4ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடக்கிறது.

பார்வதி கட்டிங்


‘பூ பட பார்வதி நீண்ட கூந்தலுடன் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ‘மரியான் ஷூட்டிங்வரை பொறுத்திருந்தவர் அதன் ஷூட்டிங¢ முடிந்ததும் பியூட்டிபார்லர் சென்று ஆண் பிள்ளைபோல சிசர் கட்டிங் செய்துவிட்டார். இது எந்த படத்துக்கான ஸ்டைல் என்றபோது, படத்தில் நடித்ததெல்லாம் அந்தந்த கேரக்டருக்காக அவர் வைத்திருந்த ஹேர் ஸ்டைலாம். மாடர்னாக வாழ நினைப்பதால் ஷூட்டிங் முடிந்ததும் இப்படியொரு ஹேர் கட் செய்துவிட்டாராம்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran