நாகூர் அருகே வேன் & பைக் மோதல் மாஜி ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 3 பேர் பரிதாப சாவு
நாகை:நாகூர் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் மாஜி ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 3 பேர் பலியாயினர்.
நாகை மாவட்டம் நரிமணத்தை சேர்ந்தவர் நாகலிங்கம்(50). இவர் நரிமணம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர். இதே பகுதியை சேர்ந்தவர் பக்தவச்சலம்(55). விவசாயி. இவர்கள் இருவரும் நேற்று இரவு நாகைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
இதேபோல் திருச்சி பெரியார் நகரை சேர்ந்த 8 பேர் ஆம்னிவேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றுவிட்டு, வேனுக்கு கேஸ் நிரப்புவதற்காக காரைக்கால் சென்று கொண்டிருந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த மரியசூசை என்பவர் ஓட்டினார்.
நரிமணம் புதுப்பாலம் அருகே சென்றபோது பைக் மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற நாகலிங்கம், பக்தவச்சலம் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். படுகாயமடைந்த வேன் டிரைவர் மரியசூசை, வேனில் வந்த விஜய்(19) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். அங்கு விஜய் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.