அல் கய்தா மிரட்டல் எதிரொலி முஸ்லிம் நாடுகளில் உள்ள தூதரகங்கள் நாளை மூடல் அமெரிக்கா திடீர் உத்தரவு
வாஷிங்டன்:தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் இருப்பதாக உளவு துறை எச்சரித்துள்ளதை அடுத்து முஸ்லிம் நாடுகளில் உள்ள தனது தூதரகங்களை நாளை ஒரு நாள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க உளவு நிறுவனம் அரசுக்கு அனுப்பிய ரகசிய தகவலில் முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தீவிரவாதிகள் தாக்க சதி திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை நாளை ஒரு நாள் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அல் கய்தா தீவிரவாதிகள் பாக்தாத், கெய்ரோ, அபுதாபி ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க போவதாக விடுத்த மிரட்டல் விடுத்துள்ளனர் என்று உளவு துறை அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முஸ்லிம் நாடுகளில் நாளை அமெரிக்க தூதரகங்கள் மூடப்படுகின்றன.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல், ஜோர்டான், பக்ரைன், லிபியா, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகங்களையும் நாளை ஒரு நாள் மூட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மிரட்டல் எதிரொலியாக இங்கிலாந்து நாடும் தனது தூதரங்களை நாளை ஒரு நாள் மூட உத்தரவிட் டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.