Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
03
Aug
முன்விரோதத்தில் வாலிபருக்கு சரமாரி அடி, உதை 10 பேர் கும்பலுக்கு வலை

பொன்னேரி:வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிய தனியார் கம்பெனி ஊழியரை 10 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது. மீஞ்சூர் அருகே நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் அடுத்த கொரஞ்சூர் ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (20). தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நடந்து போகும் போது இருட்டில் மறைந்திருந்த அதே பகுதியை சேர்ந்த முகேஷ், கார்த்திக், தீபன், சுரேஷ் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை வழிமறித்து முன்விரோதம் காரணமாக  சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அடி தாங்காமல் மணிகண்டன்  அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் அந்த கும்பல் தப்பியோடி விட்டது.

படுகாயமடைந்த மணிகண்டனை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தாக்கிய கும்பலை தேடிவருகின்றார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran