பத்மாவதி பொறியியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணர்வு கூட்டம்
கும்மிடிப்பூண்டி:கவரப்பேட்டை ஆர்விஎஸ் பத்மாவதி பொறியியல் கல்லூரியில் ராகிங் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி நிர்வாக இயக்குனர் சதீஷ் தலைமை தாங்கினார். முதல்வர் முரளி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சிவராஜ் பேசுகையில், கல்லூரியில் படிக்கும்போது மாணவர்கள் தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது. நன்கு படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும்.
மாணவர்கள் ராகிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பிறரை துன்புறுத்துவது கூடாது. மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் போலீசார் உதவ தயாராக உள்ளனர் என்றார். இன்ஸ்பெக்டர்கள் சேகர், ராஜாராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். முடிவில் பாதிரிவேடு எஸ்ஐ சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.