பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (40). இருவரும் உறவினர்கள். கடந்த ஒரு ஆண்டாக இவர்களுக்கு இடையே நிலம் சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு வெங்கடேசன் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றபோது, குமார் வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைலப்பு ஏற்பட்டது. இதையறிந்ததும் வெங்கடேசன் உறவினர்கள் காமாட்சி, சித்ரா, ஆனந்தன், சுகன்யா, குமாருக்கு ஆதரவாக கோவிந்தம்மாள், சந்திரகாந்தா, சீதா ஆகியோர் திரண்டு வந்தனர். இரு தரப்பினருக்கும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பினரும் காட்டூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.