பெண் விழுங்கிய 3 பவுன் செயின் 11 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தது
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள்(70) என்பவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை உறவினர் மல்லிகா(40) என்பவர் 9ம் தேதி திருட முயன்றார். செல்லம்மாள் கூச்சலிட்டதால், பிடிபடாமல் தப்புவதற்காக மல்லிகா நகையை விழுங்கினார். மல்லிகாவை போலீ சார் கைது செய்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் பரிசோதனையில் மல்லிகா வயிற்றில் செயின் இருப்பது தெரியவந்தது. அதனால் இனிமா கொடுத்தும், பேதி மற்றும் வாந்தி மாத்திரைகள் கொடுத்தும் செயினை வெளியே எடுக்க டாக்டர்கள் முயற்சி செய்தனர். வயிற்றுக்குள் அசைந்து கொண்டே இடம் மாறியதே தவிர வெளியே வரவில்லை. இதனால் டாக்டர்கள் செயினை வெளியேற்ற கடும் போராட்டம் நடத்தினர். மல்லிகாவை கண்காணிக்க மருத்துவமனையில் 6 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 11 நாட்கள் பெண்ணின் வயிற்றுக்குள் மறைந்து போராடிய செயின் நேற்று ஆசன வாய் வழியாக வெளியேறியது. இதனைக் கண்டு டாக்டர்களும், போலீசாரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.