இசை கலைஞர்களின் லவ் ஸ்டோரி
சென்னை:லாரன்ஸ் இயக்கும் திகில் படத்திலிருந்து இசை அமைப்பாளர் அனிரூத் விலகினார்.ராஜ்கிரண் லாரன்ஸ் நடித்த ‘முனி‘ திகில் படத்தின் இரண் டாம் பாகமாக உருவானது ‘காஞ்சனா. இதையடுத்து ‘முனி படத்தின் 3ம் பாகம் இயக்கி நடிக்கிறார் லாரன்ஸ். ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இசை அமைப்பாளராக அனிரூத்தை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் லாரன்ஸ். ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்க அனிரூத் ஒப்புதல் தரவில்லை.
‘நேரத்தின் அவசியம் கருதியும் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிற படங்களின் வேலை சுமையாலும் முனி 3ம் பாகத்திற்கு இசை அமைக்க முடியவில்லை. இந்த ஆண்டில் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களுக்கு முழுவேகத்தில் பணிகள் நடக்கின்றன என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அனிரூத்.