ஒருமையில் திட்டினார் விசு இயக்குனர் பத்ரி பேட்டி
சென்னை:வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு படங்களை இயக்கியவர் பத்ரி. அவர் கூறியது:
தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்து அதற்கான அனுமதியை டைரக்டர் கே.பாலசந்தரிடம் வாங்கினோம். ரஜினி, கமலை நேரில் சந்தித்து விழாவுக்கு அழைத்தோம். அதுபோல் அப்படத்திற்கு வசனம் எழுதிய விசுவையும் அழைக்க எண்ணி அவருக்கு போன் செய்தபோது, ‘நீ யாரு, என்னை பங்ஷனுக்கு கூப்பிட? என் படத்தை என்னோட அனுமதி இல்லாம எப்படி நீ செய்யலாம்.
நீ எப்படி படத்தை தொடங்குறேன்னு பாக்கறேன். போனை வை... என்று கோபமாக சொன்னார். பிறகு என் மீது எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்து ஷூட்டிங்கை நிறுத்த கேட்டார். தம்பிக்கு இந்த ஊரு என்ற தோல்வி படத்துக்கு பிறகு படம் இயக்க வாய்ப்பில்லாமல் இருந்தேன். அப்போதுதான் தில்லு முல்லு இயக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை நிறுத்துவேன் என்று அவர் சொன்னபோது மன வேதனை அடைந்தேன். பிறகு பட ரிலீசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அடுத்து சிவா நடிக்கும் மற்றொரு படம் இயக்க உள்ளேன்.