காதலில் தோல்வி அடைந்தேன் தனுஷ்
சென்னை:பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் தனுஷ்.தமிழில் அம்பிகாபதி பெயரில் ரிலீஸ் ஆகிறது. இதுபற்றி தனுஷ் கூறியதாவது:ஆடுகளம் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அப்போது அப்படத்தை பார்த்த ஆனந்த் எல்.ராய் தனது கதைக்கு இப்படியொரு நடிகர் தேவை என்று எண்ணினாராம். என்னை சந்தித்து நடிக்க கேட்டபோது முதலில் மறுத்தேன். கதையை கூறியபோது தமிழ் படங்களில் என்ன செய்கிறேனோ அதையே அங்கும் செய்ய வேண்டும் என்று தெரிந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். ‘ராஞ்சனா’ காதல் கதை. பள்ளி யில் படிக்கும்போது ஒரு பெண்ணை ஒரு வருடம் காதலித்தேன். அது தோல்வியில் முடிந்தது.
அப்போது எனது காதலை எப்படி வெளிப்படுத்தினேனோ அந்த உணர்வுகளைத்தான் இப்படத்தில் நடிப்பாக வெளியிட்டேன். ஒரு பெண்ணைத்தான் காதலித்தேன். அதுவும் தோல்வி அடைந்துவிட்டது.