‘எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனின் பிளாஷ் பேக் காதலியாக நடித்தவர் சுஸா குமார். அடுத்து அஜீத் நடிக்க ‘சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் விதார்த்தின் கேர்ள் பிரண்டாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது அஜீத்தை சந்தித்து பேசின£ராம். இதுவரை சந்தித்தவர்களில் மிகவும் இனிமையாகவும், அன்பாகவும் பேசியவர் அஜீத். அவரைத்தான் சந்தித்தேனா என்ற ஆச்சரியத்திலிருந்து இன்னும் சுஸாகுமாரால் மீள முடியவில்லையாம். ................................................................................................... மெயில் வாய்ப்பு
‘ஜெய் ஹிந்த 2ம் பாகம் இயக்குகிறார் அர்ஜுன். இதில் இரண்டு ஹீரோயின்கள் சுர்வீன் சாவ்லா, சார்லட் கிளார். இவர்களில் சுர்வீன், ‘மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் நடித்தவர். சார்லட் கிளாரை பொறுத்தவரை சீன நடிகைபோல் தோற்றம் உடையவர். ஆனால் அவர் மும்பையை சேர்ந்தவர்தானாம். தந்தை மராட்டியர், தாய் ஆங்கிலோ இந்தியன். மாடலாக வலம் வந்துக்கொண்டிருந்த சார்லட் தனது பயோ டேட்டாவை சில பட கம்பெனிகளுக்கு மெயில் செய்தார். அதில் கிடைத்ததுதான் அர்ஜுன் பட வாய்ப்பாம். ................................................................................................... ரஜினி வீட்டில் தியேட்டர்
ரஜினிக்கு முன்பெல்லாம் படங்களின் சிறப்பு காட்சி ப்ரிவியூ தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்போது அந்த அவசியம் கிடையாது. வீட்டிலேயே டால்பி எஃபக்டுடன் ஹோம் தியேட்டர் அமைத்துவிட்டார். எந்த படத்தையும் அவர் இனி இதில் பார்த்துக்கொள்ள முடியும். ஹோம் தியேட்டர் என்பதால் தியேட்டரில் பார்த்த திருப்தி கிடைத்துவிடும¢ என்கிறார் ரஜினி. ................................................................................................... கேரக்டர் மாதவன்
ஹீரோ வேடத்துக்காக காத்திருந்து எந்த பயனும் இல்லாததால் விரக்தி அடைந்துள்ளார் மாதவன். பாலிவுட்டிலும் வாய்ப்புகள் இல்லை. இனி எந்த மொழியில் எந்த வேடமாக இருந்தாலும் ஏற்பது என முடிவு செய்திருக்கிறார். சில சீனியர் ஹீரோக்கள் இப்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டனர். அந்த பாணியில் தன்னையும் மாற்றிக்கொள்ள மாதவன் தயாராகிவிட்டாராம்.