திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு தொழில் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து வரும் 8ம் தேதி திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தனியார் நிறுவனங்கள் பங்கு கொள்ளும் வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றனர்.
இந்த முகாமில், டி.வி.எஸ் வீல்ஸ் இண்டியா, டி.ஐ.மெட்டல்ஸ் (முருகப்பா குரூப்), டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ், ஜே.பி.எம்.ஆட்டோ, எ.பி.பி.மாருதி சர்வீஸ், சி.இ.ஓ.டேலன்ட் சர்ச், லிப்ரோ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், யுரேகா போர்ப்ஸ், நோக்கியா, ஃபாக்ஸ்கான், ரானே என்ஜின் வால்வ்ஸ், கன்ட்ரோல் இன்ஜினியரிங், எல் அன்ட் டி கன்ஸ்ட¢ரக்ஷன்ஸ், அப்பல்லோ பார்மசி, எவர்கிரீன் மேஜேஸ்டிக் இண்டியா பிஸ்டன்ஸ், சி.எம்.எஸ் கம்ப்யூட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
8ம் வகுப்பு தேர்ச்சி, எஸ்.எஸ்.எல்.சி., ஹெச்.எஸ்.சி, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி (கலை, அறிவியல் மட்டும்) டிரைவர் (லைட் முடித்தவர்கள்) படித்த மாணவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வயது 18 முதல் 25 வரையும் செக்யூரிட்டி பணியிடங்களுக்கு 45 வயது இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் தர படிகளும் வழங்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.