Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
06
Jun
கிளிப்பிங்ஸ்


பிஸி பிரபுதேவா

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘ராமய்யா வஸ்தாவய்யா‘ இந்தி படத்தை இயக்கும் பிரபு தேவா விரைவில் அதை வெளியிடுவதில் தீவிரமாக இருக்கிறார். அத்துடன் ‘ராம்போ ராஜ்குமார்‘ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதையடுத்து அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய இந்தி படத்தின் ஷூட்டிங்கை ஜூலையில் தொடங்குகிறார். இதில் சோனாக்ஷி சின்ஹா, யாமி கவுதம் ஆகியோருடன் மற்றொரு நடிகையும் நடிக்க உள்ளாராம்.

ஷெரீன் வருத்தம்

‘துள்ளுவதோ இளமை‘ ஷெரீனை ஞாபகம் இருக்கிறதா? சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருப்பது பற்றி வருத்தம் தெரிவித்தவர், தமிழ் படத்தை மிஸ் செய்கிறாராம். ‘ஹைதராபாத் லவ் ஸ்டோரி‘ என்ற டோலிவுட் படத்தில் நடித்து வரும் அவருக்கு மலையாளத்திலிருந்து வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் வாய்ப்பு வந்தபாடில்லையாம்.

வீட்டு கதவை தட்டும் வாய்ப்பு

விஜய்யுடன் ‘தலைவா‘ படத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டார் சமந்தா. ஆனால் அந்த வாய்ப்பு அமலா பாலுக்கு நழுவியது. தற்போது விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு சமந்தா வீட்டு கதவை தட்டி இருக்கிறதாம். அடுத்த ஆண்டு ஜனவரியில் விஜய் படத்தை தொடங்க உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பிலிருந்து இந்த வாய்ப்பு வந்திருக்கிறதாம். ஏற்கனவே இந்த வேடத்துக்காக தீபிகா படுகோனை முருகதாஸ் அணுகினார். ஆனால் அவரது கால்ஷீட் இல்லாததால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம்.

இரவில் நடிக்கும் குழந்தை

‘தெய்வத் திருமகள்‘ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா அடுத்து ‘நிலா சோறு‘ ‘விழித்திறு‘ படங்களில் நடிக்கிறார். இரவு நேரத்தில் ஷூட்டிங் நடப்பதால் பகல் முழுவதும் தூங்கிவிட்டு இரவில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம். தனது அப்பாவிடம் தன்னை லண்டனுக்கு அழைத்து செல்லும்படி செல்லமாக கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம் சாரா.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran