தமிழில் வரும் வில் ஸ்மித் படம்
சென்னை: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவரது மகன் ஜேடன் ஸ்மித் இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஆப்டர் எர்த்'. தந்தை மகனாகவே இருவரும் நடித்திருக்கின்றனர். ‘மென் இன் பிளாக்‘ படத்தில் சிறு வேடத்தில் நடித்த ஜேடன், ‘கராத்தே கிட்' படத்தில் ஜாக்கி சானுடன் நடித்திருக்கிறார். ‘ஆப்டர் எர்த்‘ படத்தின் கதையை வில் ஸ்மித்தே உருவாக்கி இருக்கிறார். ஒரு தந்தையும மகனும் கார் விபத்தொன்றில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்ற கருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பூமி பின்னணியில் நிகழும் விபத்தை விண்ணுலகின் பின்னணிக்கு நகர்த்தி ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் நிகழும் சம்பவங்களின் கோர்வையாக படம் உருவாகி இருக்கிறது. திரைக்கதை காரி விட்டா. மனோஜ் நைட் ஷியாமளன் டைரக்ஷன். ஹாலிவுட் படமான இது தமிழிலும் நாளை திரைக்கு வருகிறது.