ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவீதம் வெற்றி
திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றியாகும்.
மாணவி ரோகிதா 1200க்கு 1137 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்தார். கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றார். ஜமுனா 1128 மதிப்பெண் பெற்று, 2ம் இடத்தை பிடித்தார். வேதியியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார். லட்சுமி 1126 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை பள்ளி நிறுவனர் என்.வெங்கடேசன், தாளாளர் என். அரிகிருஷ்ணன், முதல்வர் டி.ரங்கநாதன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.