Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
May
நெல்லை நாடார் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 174 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி துர்கா 1139 மார்க் பெற்று சாதனை படைத்தார். மாணவிகள் பாண்டிமீனா 1131 மார்க்கும், ஜாக்குலின் ஜெஸி 1130 மார்க்கும் பெற்றுள்ளனர். விஜயசரவணன் கணிதத்தில் 200, சிவசுப்பிரமணியன் கணினி அறிவியலில் 200, ரம்யா கணக்கு பதிவியலில் 200 பெற்று சாதனை படைத்துள்ளனர். 100 சதவீத வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் தாளாளர் ஏ.எம்.விக்கிரமராஜா பாராட்டினார்.

நெல்லை நாடார் மகமை பரிபாலன சங்கம் திறம்பட நடத்தி வரும் இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 110 ஆசிரியர்களும் உள்ளனர். இந்த ஆண்டு முதல் கே.ஜி. வகுப்புகள் அனைத்திலும் ஏ.சி வசதி செய்யப்பட்டு 500 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆடியோ விஷன் மற்றும் ஹோம் தியேட்டர் வசதியும் உள்ளது. கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து வீரர்கள் பலரை மாநில அளவில் உருவாக்கியும் சாதனை படைத்துள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,