Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
May
தஞ்சையில் பரிதாபம் வெண்ணாற்றில் தேங்கி கிடக்கும் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


தஞ்சை: தஞ்சை வெண்ணாற்றில் தேங்கி கிடக்கும் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் இறந்தனர்.தஞ்சை வடக்கு வாசல் ஏ.வி.பதி நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அரவிந்தன் (7), விடுமுறைக்கு இவர்களது வீட்டுக்கு வந்திருந்த பெரம்பலூர் மாவட்டம் ஆவனங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜராஜன் (11) மற்றும் சில சிறுவர்கள் தஞ்சை வெண்ணாறு நீரேற்று நிலையம் அருகே தேங்கி கிடக்கும் நீரில் நேற்று குளித்தனர்.

அப்போது, அரவிந்தனும், ராஜராஜனும் நீரில் மூழ்கினர். அவர்களை மற்ற சிறுவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய அரவிந்தன், ராஜராஜனின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,