‘சிக்குபுக்கு’ ‘சிக்குபுக்கு’ ரயிலு கலக்குது பார் இவ ஸ்டைலு ஓடும் ரயிலில் 2வது முறையாக இரட்டை குழந்தை பெற்ற பெண்
லக்னோ: ஓடும் ரயிலில் 2 முறை இரட்டை குழந்தை பெற்ற பெண்ணுக்கு பயணிகள் பிரசவம் பார்த்தனர்.
இந்த ருசிகர சம்பவம் பற்றி விவரம்உத்தரபிரதேசம் கோண்டா பகுதி குந்தரா கிராமத்தை சேர்ந்தவர் ஜுபின் நிஷா, அபிபுல்லா தம்பதி. ஜுபின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் இருவரும் மும்பை வந்திருந்தனர். கடந்த ஞாயிற்றுகிழமை இருவரும் கான்பூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் புறப்பட்டனர். அப்போது ஜுபினுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
ரயிலிலிருந்து இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டது. ஓடும் ரயிலில் பிரசவ வலியால் ஜுபின் துடித்தார். உடனடியாக அங்கிருந்த பெண்கள் ஆண்களை வேறு பெட்டிக்கு மாறச் சொல்லிவிட்டு பிரசவம் பார்க்க தயாரானார்கள். சிறிது நேரத்தில் ஜுபினுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதற்கிடையில் லக்னோ ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு டாக்டர்கள் குழு தயாராக நின்றிருந்தனர். ரயில் லக்னோ வந்ததும் தாய், சேய்(இரட்டை குழந்தை) மூவரையும் டாக்டரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக தாயும் சேய்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 2 வருடத்துக்கு முன்பு ஜுபினுக்கு இதேபோல் ரயிலில் சென்றபோது இரட்டை குழந்தை பிறந்தது. இதுபற்றி அவரது கணவர் கூறும்போது,‘இது எங்களுக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம். எங்கள் குழந்தைகள் ரயிலில் பிறக்க வேண்டும் என்று ஆண்டவனால் வகுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஆண்டவனுக்கும், குழந்தை பிறக்க உதவிய ரயில் பயணிக்களுக்கும் நன்றி‘ என்றார்.