பூண்டி, எல்லாபுரம் ஒன்றிய வீடுகளில் கருப்பு கொடி
ஊத்துக்கோட்டை: பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து அக்கட்சியினர் பூண்டி ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமையில் மாமண்டூர், ஒதப்பை, சோமதேவன்பட்டு, வெள்ளாத்துகோட்டை, ஆற்றம்பாக்கம் ஆகிய கிராமங்களிலும் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் காக்கவாக்கம், வண்ணாங்குப்பம், செம்பேடு, புன்னப்பாக்கம், பனையஞ்சேரி மற்றும் பெரியபாளையம் அருகே உள்ள நெல்வாய், காரணி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைக்கப்பட்டது.