திருத்தணி அருகே கிராமத்தில் ஜிஆர்டி இன்ஜி. கல்லூரி பஸ் எரிப்பு
திருத்தணி: திருத்தணி அருகே கிராமத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் கல்லூரி பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது.
திருத்தணியில் உள்ள ஜிஆர்டி பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் நேற்று இரவு புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 2 மணி அளவில் பஸ் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது. தூங்கிக்கொண்டு இருந்த டிரைவர் எழுந்து பார்த்தார். பஸ் எரிந்து கொண்டு இருந்ததால் வெளியே ஓடிவிட்டார். கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீஸ் ஏஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பஸ்சின் பெரும் பகுதி எரிந்துவிட்டது.
இதுசம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார், புச்சிரெட்டிப்பள்ளியை சேர்ந்த கேசவன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.