Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
29
Apr
பாண்டூர் இந்திரா கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பாண்டூர் இந்திரா கல்வியியல் கல்லூரியில் 2010&2012 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் வி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் சாந்தி பிரமோத் வரவேற்றார். மாநில தகவல் உரிமையியல் முன்னாள் ஆணையர் சாரதா நம்பி ஆரூரான் கலந்து கொண்டு இளங்கலை பட்டம் படித்த 200 மாணவ, மாணவிகளுக்கும், முதுகலை பட்டம் படித்த 40 பேருக்கும் பட்டம், ரேங்க் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பயிற்சி முடித்து பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும்போது மாணவர்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். ஆசிரியர் பணி தலை சிறந்த சமுதாய பணி என்றார்.

விழாவில் முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பேராசிரியர் ராதிகா வித்யா சாகர் நன்றி கூறினார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran