Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
07
Feb
ஹீரோயின் எஸ்கேப்


நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

முழுசா கன்னடம் பக்கம் போயிருந்த சேகர இயக்கம் மறுபடியும் கோலிவுட் பக்கம் தலைகாட்றாராம்... காட்றாராம்... பையன் நடிக்க வர்றதால உற்சாகத்துல இருக்கும் இயக்கம், பழைய டிரெண்டுல இருந்து மாறப்போறாராம். வழக்கமா குடும்ப கதைலேயே கவனமா இருந்தவர் இந்த கால டிரெண்டுக்கு ஏற்ப மகன் படத்த இயக்கப்போறாராம். இதுக்காக சமீபத்துல வரவேற்பு பெற்ற பல படங்கள பார்த்து ஃபேன்ஸ்களோட எண்ணத்த எடைபோட்டிருக்காராம்... இருக்காராம்...
...................................................................
தமன் நடிகை பாலிவுட்டுக்கு போயிருக்காராம்... இருக்காராம்... ரீமேக் படத்துல ஸ்ரீ நடிகையோட வேஷம் ஏத்து நடிக்கறாராம். இதுக்கான ஷூட்டிங் முடிஞ்சி பட புரமோஷன்ல பட குழு இறங்கி இருக்காங்களாம். ஆனா தமன் நடிகை மட்டும் இதுல கலந்துக்கலயாம். டோலிவுட்ல சில படங்களில் கால்ஷீட் கொடுத்திருக்கேன். அதால புரோமேஷன் விஷயங்கள நீங்களே பாத்துக்கங்கன்னு இயக்கத்துகிட்ட சொல்லிட்டு எஸ்ஸாயிட்டாராம்... ஆயிட்டாராம்...
...................................................................
பஞ்ச் நடிகர் படத்துல ஓவர் பில்டப் காட்சிகளை தாண்டவமாடுன இயக்கம் சேர்த்துக்கிறாராம். கதைப்படி அந்த காட்சிகள் இல்லையாம். நடிகரை குஷிப்படுத்தவே காட்சிகளை உருவாக்கினாராம். இதனால நடிகரு குஷியா இருக்காராம்... இருக்காராம்... ரசிகர்களோட பல்ஸ் தெரிஞ்ச இயக்குனரு நீங்கதான்Õனு இயக்கத்தை பாராட்டுறாராம். இதையெல்லாம் கேட்டுட்டு யூனிட்காரங்க தலையில அடிச்சிக்கிறாங்களாம்... அடிச்சிக்கிறாங்களாம்...

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel